"அனைத்து மொழிகளிலும் சுற்றுசூழல் மதிப்பீடு அறிக்கை" - தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரணை

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21- ம் தேதிக்குள் வெளியிடப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-22 11:51 GMT
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21- ம் தேதிக்குள் வெளியிடப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இது குறித்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கை அக்டோபர் 21ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் அது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.வரைவு அறிக்கை குறித்த கருத்து கேட்பு விரிவாக நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, கருத்து கேட்பு விரிவாக நடத்துவது குறித்து   பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்