20 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை - 4 மணிக்குள் இலக்கை எட்டிய சுகாதாரத்துறை

20 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை - 4 மணிக்குள் இலக்கை எட்டிய சுகாதாரத்துறை

Update: 2021-09-12 12:51 GMT
20 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை - 4 மணிக்குள் இலக்கை எட்டிய சுகாதாரத்துறை 

தமிழகம் முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் சாரை சாரையாக படையெடுத்த‌தால், பல தடுப்பூசி முகாம்கள் ஸ்தம்பித்தன. இதனால் தமிழக அரசு நிர்ணயித்த இலக்கை 3 மணி நேரம் முன்பாகவே எட்டியுள்ளது.தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில், 20 லட்சத்திற்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஒருவாரகாலமாக செல்போன் குறுஞ்செய்தி, தண்டோரா என பல்வேறு விதமாக மாவட்ட நிர்வாகங்கள் மக்களுக்கு அறிவுறுத்தின. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மக்களின் ஆர்வத்தால், பல்வேறு இடங்களில் தடுப்பூசி தடுப்பாடு ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க, தமிழக அரசு நிர்ணயித்த 20 லட்சம் தடுப்பூசி என்ற இலக்கு, மாலை 4 மணிக்கு முன்பாகவே எட்டப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்