"செப். 1 முதல் புதிய வாகனங்களுக்கு, 5 ஆண்டு காப்பீடு கட்டாயம்" - உயர்நீதிமன்றம்

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், புதிய வாகனங்கள் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-26 07:56 GMT
2016ம் ஆண்டு ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்,

புதிய வாகனத்தை வாங்கும்போது, அது எவ்வாறு செயல்படும் என்பதில்தான் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதாகவும், காப்பீடு நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்வதில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

மேலும், வாகனங்கள் வாங்குபவர்களுக்கு காப்பீடு தொடர்பான விவரங்களை, விற்பனையாளர்கள் முழுமையான தெரிவிப்பதில்லை என்று நீதிபதி குற்றம்சாட்டினார்.

வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி,

புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக செப்டம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்