தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வருகிறது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டையில் இன்று காலை 5 மணி முதலே பரவலாக சாரல் மழை பெய்ய தொடங்கியது மலையானது அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் சின்ன புளியம்பட்டி, ஆத்திப்பட்டி, பாளையம்பட்டி போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் அம்மம்பாளையம் தென்னங்குடிபாளையம் ,வடக்கு ,தெற்கு காடு, பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, காட்டுக்கோட்டை தலைவாசல் ,மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை கருமேகம் சூழ்ந்து சூரிய ஒளி இல்லாமல் இருளில் இருந்தது சில மணிநேரங்களுக்கு முன்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் ஆடிப்பட்டம் விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இதனால் நீர் நிலைகளில் நீர் மட்டம் உயரும் என்பதால் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய நீர் ஆதாரம் உயரும் என்பதால் பொது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் குளிர் சீதோசன நிலை நிலவுவதால் நகரப் பகுதி மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் மற்றும்சுற்றியுள்ள பகுதிகளில் இன்று விடியல் காலை முதல் 3 மணி நேரம் இடி மின்னலுடன் மழை பெய்தது.
திண்டிவனத்தில் நேற்று முதல் கருமேகம் சூழ்ந்து இருந்தது. இன்று விடியல் காலை முதல் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால்திண்டிவனம் சுற்றியுள்ள ஜக்காம் பேட்டை, சிங்கனூர், இறையானூர், சலவாதி, பட்டணம், ஊரல் உட்பட பல கிராமப் பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் 3 மணி நேரம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது . திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தடைபட்டது.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் எலவனாசூர்கோட்டை உளுந்தூர்பேட்டை திருநாவலூர் கெடிலம் மடப்பட்டு உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. அதிகாலையிலிருந்து பெய்து வரும் இந்த மழையினால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல 20க்கும் மேற்பட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அதிகாலை முதலே குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரங்களில் கம்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் இந்த தொடர் மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.