புளியந்தோப்பு குடியிருப்பு - கவன ஈர்ப்பு தீர்மானம்
புளியந்தோப்பு குடியிருப்புக்கு ஒப்புதல் அளித்த ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றவியல் நடவடிக்கை தேவை என சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பரந்தாமன் கோரிக்கை விடுத்தார்.
புளியந்தோப்பு குடியிருப்புக்கு ஒப்புதல் அளித்த ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றவியல் நடவடிக்கை தேவை என சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பரந்தாமன் கோரிக்கை விடுத்தார். கே.பி.பூங்கா அடுக்குமாடி குடியிருப்பு தரமற்ற முறையில் இருப்பது தொடர்பாக எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கட்டடம் அமைக்க ஒப்புதல் அளித்த ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடந்த ஆட்சியின் போது கட்டி முடிக்கப்பட்ட கே.பி.பூங்கா குடியிருப்பின் ஸ்திரத்தன்மை குறித்து இந்திய தொழில் நுட்ப கழகம் ஆய்வு செய்ய உள்ளது என்றார். அந்த ஆய்வில் தவறு கண்டறியப்பட்டால், ஒப்பந்ததாரர் மற்றும் சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பரசன் உறுதி அளித்தார்.