கோவாக்சின் 2-ம் டோஸ் செலுத்துபவர்களுக்கே முன்னுரிமை - மா.சுப்பிரமணியன்
விரைவில் உருமாற்றமடைந்த வைரஸ் கண்டுபிடிப்பு ஆய்வகம் டிஎம்எஸ் வளாகத்தில் துவங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விரைவில் உருமாற்றமடைந்த வைரஸ் கண்டுபிடிப்பு ஆய்வகம் டிஎம்எஸ் வளாகத்தில் துவங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளை அழைத்து செல்லும் மின்கல வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார். மேலும், தடுப்பூசி தட்டுப்பாட்டால் தற்போது கோவேக்சின் முதல் தவணை யாருக்கும் செலுத்தப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.