மாநிலங்களவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் வரும் செப்.13 ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக மாநிலங்களவை எம்பி-ஆக இருந்த முகமது ஜான், கடந்த மார்ச் 23 ஆம் தேதி உயிரிழந்தார்.
முகமது ஜானின் பதவிக்காலம் வரும் 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி வரையில் இருப்பதால், இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இந்த மாநிலங்களவை இடத்துக்கு செப். 13 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலுக்கு ஆக. 24ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
வேட்புமனு மறுபரிசீலனை மற்றும் திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் செப். 3-ஆம் தேதி என்றும் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தல் காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் என்றும்
மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளது.
கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும் என்றும்,
தேர்தலை கண்காணிக்க ஒரு மூத்த அதிகாரியை தமிழக தலைமை செயலாளர் நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.