ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

கொரோனா பரவலைத் தடுக்க ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

Update: 2021-08-09 11:21 GMT
அத்தியாவசியக் கடைகள் தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கர்நாடகா - தமிழ்நாடு மாநில எல்லைகளில் சோதனைச் சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட  பரிசோதனை சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசிகள் 2 தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்