செப்.1ல் பள்ளிகள் திறக்க உத்தேசம் : "தடுப்பூசி போட்டுவிட்டு திறக்கலாம்" - மூத்த விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் கருத்து
பள்ளிகள் திறப்பு குறித்த உத்தேச தேதியை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி, சவுமியா சாமிநாதன் கூறிய தகவல்களை பார்க்கலாம்.
இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா ப்ளஸ் கொரோனா வகை, 135 க்கும் அதிகமான நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த வகை வைரஸ், வேகமாக பரவும் தன்மையுடன், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் பாதிக்கும் நிலையில், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி வருகின்றன.
இதனை கண்டித்துள்ள உலக சுகாதார நிறுவனம், ஏற்கனவே மிக அதிக அளவிலான தடுப்பூசிகளை பயன்படுத்திய வளர்ந்த நாடுகள், கூடுதலாக தடுப்பூசி பயன்படுத்துவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.
மேலும், வளர்ந்த நாடுகளுக்கு தடுப்பூசிகள் செல்வதை விட, வருவாய் குறைந்த ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதை
உறுதிசெய்ய வேண்டும் எனவும், அப்போதுதான் குறைந்தபட்சம் 1 டோஸ் ஆவது அனைவருக்கும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்த சூழலில், இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பற்றிய அச்சம் எழுந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு,
தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது