நில வரி விதிப்பிலிருந்து விலக்கு கோரிய மனு - சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

மத்திய அரசு நிறுவனம் என கூறி தமிழ்நாடு நகர்புற நில வரி விதிப்பிலிருந்து விலக்கு கோரிய இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Update: 2021-08-05 03:07 GMT
மத்திய அரசு நிறுவனம் என கூறி தமிழ்நாடு நகர்புற நில வரி விதிப்பிலிருந்து விலக்கு கோரிய இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மண்டல செயல் இயக்குனர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், விமான நிலையங்கள் ஆணையத்தை, மத்திய அரசு நிறுவனமாக கருத முடியாது என்ற தமிழ்நாடு அரசு விளக்கத்தை ஏற்று கொண்டதாக கூறினார். தமிழ்நாடு நகர்புற நில வரி சட்டத்தின்படி விதிக்கப்பட்ட வரிவிதிப்பை உறுதி செய்ததுடன், விமான நிலையங்கள் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
அரசு நிர்ணயித்த நகர்புற நில வரியில் இடைக்கால உத்தரவின்படி ஏற்கனவே 50 சதவீதம் செலுத்தப்பட்டு விட்டதால், மீதமுள்ள வரியை 4 மாதங்களில் செலுத்தும்படி விமான நிலையங்கள் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்