அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு.. எடப்பாடி பழனிசாமி பதில் மனுத்தாக்கல்
அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு.. எடப்பாடி பழனிசாமி பதில் மனுத்தாக்கல்
அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு.. எடப்பாடி பழனிசாமி பதில் மனுத்தாக்கல்
அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை, அபராதத்துடன் நிராகரிக்க கோரி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.உட்கட்சி தேர்தலை நடத்தாமல், நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி, சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், மதுசூதனன், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், கட்சின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுக தலைமையை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டதால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.