தமிழக பாஜக தலைவராகும் அண்ணாமலை - போலீஸ் அதிகாரியாக அதிரடி செயல்பாடுகள்

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை கடந்த வந்த பாதை குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

Update: 2021-07-14 05:15 GMT
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை கடந்த வந்த பாதை குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து, தமிழக பாஜக தலைவர் யார்
என்ற கேள்வி எழுந்தது.இந்த நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், பாஜக மாநில துணைத் தலைவருமான அண்ணாமலையை, மாநில தலைவராக நியமிப்பதாக அறிவித்தார் பாஜக தேசிய தலைவர் ஜேபிநட்டா. தமிழகத்தின் கரூர் மாவட்டம் தொட்டம்பட்டியில்1984 ல் பிறந்த, 
அண்ணாமலை, லக்னோ ஐ.ஐ.எம். இல் பட்டப்படிப்பை முடித்தார். 2011 ல் ஐபிஎஸ் ஆன இவர், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் கர்நாடகாவின்
உடுப்பி மற்றும் சிக்மகளூரு மாவட்டங்களில், சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக அவர் காட்டிய அதிரடி, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.சிங்கம் சூர்யா பட பாணியில் போதைப்பொருள் தடுப்பு, இரவு நேர ரோந்து என பம்பரமாக சுழன்றதால், கர்நாடகாவின்
சிங்கம் என மக்கள் அன்பு காட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்