நீட் தேர்வு பயிற்சி - அமைச்சர்களின் முரண்பட்ட கருத்தால் குழப்பம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படும் விவகாரத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெவ்வேறு கருத்து தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படும் விவகாரத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெவ்வேறு கருத்து தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மே மாதம் 10 மற்றும் 25 - ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு அளிப்பது குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாறுபட்ட கருத்து தெரிவித்திருப்பது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.