"நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-12 02:31 GMT
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தென்மேற்கு பருவக்காற்று  காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும்,தேனி மாவட்டத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் விருதுநகர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்