ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - அதிமுக பெண் பிரமுகர் வாக்குவாதம்
சிவகாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பெண் பிரமுகர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தங்கல் சாலையில் தேநீர் கடை நடத்தி வரும் அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் ஜோதி, தனது கடையின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஜேசிபி எந்திரத்தின் முன்பாக தரையில் படுத்து, மறியலில் ஈடுபட்டார். அவரை சமாதானப்படுத்திய நகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டுமென கால அவகாசம் கொடுத்து சென்றனர்.