75 நாட்களுக்கு பிறகு மீன் பிடி தொழில் - கடலுக்கு சென்ற மீனவர்கள்

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இருந்து 75 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Update: 2021-06-30 04:58 GMT
75 நாட்களுக்கு பிறகு மீன் பிடி தொழில் - கடலுக்கு சென்ற மீனவர்கள் 

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இருந்து 75 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு  மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்தும், கொரோனா தொற்று காரணமாக  ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்நிலையில், 75 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு மீனவர்கள் மீன்பிடிக்காக பாக் ஜலசந்தி கடலுக்கு சென்றனர். மண்டபம் பகுதியில் இருந்து ஆயிரத்து 500-க்கும் அதிகமான படகுகளில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மீனவர்கள் கடலுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்