மநீம கட்சிக்கு புதிய உயர்மட்ட நிர்வாகிகள் - நாளை அறிவிக்கிறார் கமல்ஹாசன்
மநீம கட்சிக்கு புதிய உயர்மட்ட நிர்வாகிகள் - நாளை அறிவிக்கிறார் கமல்ஹாசன்
மநீம கட்சிக்கு புதிய உயர்மட்ட நிர்வாகிகள் - நாளை அறிவிக்கிறார் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான புதிய உயர்மட்ட நிர்வாகிகளை, அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை அறிவிக்கிறார்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து விலகினர். இது குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தன் அரசியல் பயணத்தை ஒருபோதும் நிறுத்தாது என தெரிவித்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் நிர்வாகளுடன் கமல்ஹாசன் நாளை காலை காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார்.