கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி:பயிற்சியை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

Update: 2021-06-17 03:52 GMT
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார். 26 மாநிலங்களில் உள்ள 111 பயிற்சி மையங்களில் இந்நிகழ்ச்சி தொடங்கவுள்ளது,.  நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் முன்களப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது,. வீட்டு கவனிப்பு உதவி , அடிப்படை கவனிப்பு உதவி, மேம்பட்ட சிகிச்சை உதவி, அவசர சிகிச்சை உதவி, மாதிரி சேகரிப்பு மற்றும் மருத்துவ சாதன உதவி ஆகியவற்றில் திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்த பயிற்சி வழங்கப்படும் என்றும் இதற்காக 276 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்