முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய மாலை முரசு நிர்வாகம்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாலை முரசு நிர்வாகம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாலை முரசு நிர்வாகம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதிக்காக அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, தொழிலதிபர்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த மாலை முரசின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.