4,750 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி - காற்றில் பறந்த சமூக இடைவெளி
கரூரில் 4 ஆயிரத்து 750 முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை, அரவக்குறிச்சி, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 27 மையங்கள் அமைக்க பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும், 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்ட முன் கள பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த பட்டது. முன் பதிவு செய்யாதவர்களும் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.