ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2021-06-03 11:29 GMT
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு  

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
 இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில்,மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உள்ளதால்,  அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதமைச்சர் தெரிவித்து உள்ளார்.மேலும், மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளை சென்றடைய, தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படும் என்றம்,இதற்காக டெல்டா மாவட்டங்களில் 65 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 647 திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.மேலும், விவசாய பணிகளுக்கு தேவையான விதை நெல், உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்