கால தாமதத்தை தவிர்க்க புதிய முறை - கால தாமதமானால், சுங்க கட்டணம் ரத்து
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், வாகனங்கள் செல்ல கால தாமதம் ஏற்பட்டால், அவற்றிற்கு சுங்கக் கட்டணங்கள் ரத்து செய்ய வகை செய்யும் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், வாகனங்கள் செல்ல கால தாமதம் ஏற்பட்டால், அவற்றிற்கு சுங்கக் கட்டணங்கள் ரத்து செய்ய வகை செய்யும் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட் உள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. பாஸ் டேக் முறையிலும், சுங்கச் சாவடியை கடக்க கால தாமதம் ஆவதாக புகார்கள் எழுகின்றன.
சுங்கச்சாவடியை ஒரு வாகனம் 10 விநாடிக்குள் கடக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் சில சமயங்களில் வாகனங்களில் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தால், தாமதம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய விதிமுறையை கொண்டு வர, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தாமதங்களை தவிர்க்கவும், சுங்கசாவடிகளின் செயல் திறனை அதிகரிக்கச் செய்யவும், இனி 100 மீட்டர்களுக்கும் அப்பால், வாகனங்கள் காத்திருக்க நேரிடுமானால், 100 மீட்டர்களுக்குள் காத்திருக்கும் வாகனங்களுக்கு சுங்க்ச்சாவடி கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுங்கச் சாவடிகளில் உள்ள அனைத்து பாதைகளிலும், சுங்கச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஒரு மஞ்சள் கோடு வரையப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் கோட்டிற்கு பின்னால் வாகனங்கள் காத்திருக்க நேரிடும் தருணங்களில், அந்த கோட்டிற்கு பின்னால், அதாவது 100 மீட்டர் தூரத்தை தாண்டி வரிசையில் நிற்கும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு, சுங்கசாவடியை உடனே கடக்க வகை செய்யப்ப்பட உள்ளது. ஆனால் இந்த விதிமுறையை நடைமுறையில் அமல்படுத்துவது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெளிவாகவில்லை. புதிய விதியின்படி, சுங்கச் சாவடியில் பணம் கட்டாமல் வாகனம் செல்வதற்கு பாஸ்டேக் கட்டணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டால் தான் அது சாத்தியம் என்பதால் அது பற்றிய விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.