மதுரை ஆவினில் ரூ. 13.78 கோடி முறைகேடு... விசாரணையில் 5 பேர் பணியிடை நீக்கம்

மதுரை ஆவினில் 13.71 கோடி ரூபாய் வரையில் நடந்த முறைகேடு தொடர்பாக உதவி பொதுமேலாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-05-11 07:34 GMT
மதுரை ஆவினில் ரூ. 13.78 கோடி முறைகேடு... விசாரணையில் 5 பேர் பணியிடை நீக்கம் 

மதுரை ஆவினில் 13.71 கோடி ரூபாய் வரையில் நடந்த முறைகேடு தொடர்பாக உதவி பொதுமேலாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மதுரை ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை போக தயிர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால்சார்ந்த உபபொருட்களும் உற்பத்தி செய்ப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனத்தின் பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதால், உற்பத்தி அதிகரிக்கப்படு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக பால் உபபொருட்கள் விற்பனையில் 13 கோடியே 71 லட்ச  ரூபாய் முறைகேடு நடைபெற்று உள்ளதாக ஆவின் நிர்வாக இயக்குநர் கே . நந்தகோபாலுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக மேற்கொண்ட தணிக்கையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து  உதவி பொதுமேலாளர்கள் கிருஷ்ணன், சேகர் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிக்க நெய் அனுப்பியது மற்றும் வெளிச்சந்தையில் நெய், வெண்ணெய் விற்பனை செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்