உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்
தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் உளவுத்துறை என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் அனுபவம் மிக்க அதிகாரிகள்தான் நியமிக்கப்படுவார்கள். அனுபவம் மிக்க டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் 1995 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் ஏ.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார். பின்னர் கடலூர் எஸ்.பி. யாக பணியாற்றினார்.
கியூ பிரிவு எஸ்.பி, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஐஜி, உளவுத்துறை ஐஜி, மதுரை,கோவை மாநகர காவல் ஆணையர் என பல முக்கிய பொறுப்புகளில் டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றியுள்ளார். கியூ பிரான்ஞ்சில் பணிபுரிந்த போது மாவோயிஸ்ட்கள் ஊடுருவல் தடுப்பு பணியை சிறப்பாக செய்ததாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டை பெற்றார். அவர் பல வழக்குகளை சிறப்பாக கையாண்டவர் என்பது குறிப்பிடதக்கது.