ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பராமரிப்பு பணிகள் தீவிரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உள்ள ஆக்சிஜன் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Update: 2021-05-08 10:51 GMT
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை  அளிக்க, மருத்துவ ஆக்ஸிஜன் முக்கிய பங்காற்றி வருகிறது. அதே நேரத்தில் போதிய கையிருப்பு இல்லாத நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் கண்டறிந்து, உற்பத்திக்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தை மையத்தில், உற்பத்தியை தொடங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், ஆக்ஸிஜன் உற்பத்தி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு  ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் பணியாற்ற இருக்கும் ஊழியர்கள் ஆலையின் மற்ற பகுதிகளுக்கு செல்லாதாவாறு தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமாராக்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனை உச்சநீதிமன்றம் அமைத்த குழு கண்காணித்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும், ஓரிரு நாட்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்