ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் - ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார்.

Update: 2021-05-05 07:27 GMT
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் - ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர் 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். இருவரும் பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்திக் கொண்டனர். மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி ஆளுநர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் உரிமை கோரினார். அத்துடன் எம்.எல்.ஏக்களின் தீர்மான கடிதத்தையும் ஆளுநரிடம் ஸ்டாலின் வழங்கினார். ஆட்சி அமைக்க இன்று மாலைக்குள் ஆளுநர் அழைப்புவிடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஸ்டாலினுடன் இருந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்