கீழடி, அகரம் அகழாய்வில் புதிய பொருள் கண்டெடுப்பு.. காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பு

கீழடி, அகரம் அகழாய்வில் புதிய பொருள் கண்டெடுப்பு.. காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பு

Update: 2021-04-30 03:21 GMT
கீழடி, அகரம் அகழாய்வில் புதிய பொருள்.. காமராஜர் பல்கலை., அனுப்பி ஆய்வு 

சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அகரத்தில், பழங்கால மண் பானைகள் கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.தமிழர் வரலாறு குறித்தும், வாழ்வியல் குறித்தும் நடைபெறும் 7ஆம் கட்ட அகழாய்வில் பல்வேறு அரிய புதிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. முதுமக்கள் தாழி, அதற்குள் மனித எலும்புக்கூடு, கூர் கத்தி, கல்வட்டம் ஆகியவை 7ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்ததன் மூலம், தமிழர் வரலாற்றில் மேலும் பல தகவல்களை தந்து வலுசேர்த்துள்ளது. கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் அகரத்தில் நடந்த அகழாய்வில், வெவ்வேறு அமைப்புடைய 3 மண் பானைகள் ஒரே இடத்தில் கிடைத்துள்ளன. கீழடியில் கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட கிண்ணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பபட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்