அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கு: திமுக எம்.எல்.ஏ. உள்ளிட்ட 5 பேர் விடுதலை

ரேஷன் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Update: 2021-04-20 10:36 GMT
ரேஷன் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 2 ஆயிரத்து 17ம் ஆண்டு, தமிழக அரசு ரேஷன் பொருட்களின் விலையை உயர்த்தியதைக் கண்டித்து சென்னை அண்ணா நகரில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் திமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எம்.கே.மோகன், அதியமான், ஏ.எம்.வேலாயுதம், சந்திரபாபு, செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது. சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆலிசியா, எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்