தடுப்பூசியை எடுத்துக்கொண்ட விஜயபாஸ்கர் - பிறஅமைச்சர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்
கொரோனா தடுப்பூசியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செலுத்திக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செலுத்திக்கொண்டார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 907 பேர் தான் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளதாக கூறினார். தன்னை தொடர்ந்து பிற அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.