"நெய்வேலி 2-ம் அனல்மின் நிலையத்தில் 7 அலகுகளை மூடத் தேவையில்லை" - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு

நெய்வேலி 2-ம் அனல்மின் நிலையத்தில் உள்ள 7 அலகுகளை மூட, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மறுத்து விட்டது.

Update: 2020-12-22 14:01 GMT
இது தொடர்பாக மீனவர் நலச் சங்கத்தின் சார்பில்,கே. செல்வராஜ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை,  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏகே.கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, நெய்வேலி அனல் மின் நிலையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2-ம் அனல்மின் நிலையத்தில் உள்ள 7 அலகுகளை தொடர்ந்து இயக்க மத்திய மின்சார ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இரண்டாம் அனல்மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் வழக்கற்றுபோகவில்லை என்றும், கொதிகலன்களின் ஆயுட்காலம் மேலும் 6 ஆண்டு காலம் இயக்கும் வகையில் உள்ளதாக கொதிகலன்கள் இயக்குனர் சான்றளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், நெய்வேலி 2-ம் அனல்மின் நிலையத்தில் உள்ள 7 அலகுகளை மூட  உத்தரவிட மறுத்ததுடன், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவ்வப்போது நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்