தொடர் மழையால் மண்பாண்டத் தொழில் கடும் பாதிப்பு

தொடர் மழையால் மானாமதுரை மண்பாண்ட தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-11-18 13:32 GMT
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரம் மண்பாண்ட தொழிலுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு சீசனுக்கு ஏற்றவாறு கலைநயம் மிக்க மண்பாண்ட பொருட்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. வருகிற 30-ஆம் தேதி திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அங்கு விளக்குகள் தயாரிக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டு  இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், விளக்குகள் தயாரிக்க தேவையான மணல் எடுப்பதிலும், தயாரிக்கப்பட்ட பொருட்களை உலர வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக  மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், மானாமதுரை, திருப்புவனம், பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மழை காரணமாக உற்பத்தி கூடங்களை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், ஒருசில தொழிலாளர்கள் வீட்டினுள் வைத்து பொருட்களைத் தயாரித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்