தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் தொடர்ந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
70 ஆண்டுகள் பழமையான பள்ளியின் நிலத்தை வணிக பயன்பாட்டிற்காக விற்பதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில் சிங்காரம் பிள்ளை பள்ளி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், கல்வி பயன்பாட்டிற்காக விற்கப்பட்ட அந்த நிலத்தை, பள்ளியின் செயலாளர், தனி நபர்களுக்கு விற்பதாக ரங்கநாதன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு, பள்ளி கல்வி துறை, பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.