"செல்வமுருகன் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்
கடலூரை சேர்ந்த செல்வமுருகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி போலீசாரால் செல்வமுருகன் சித்ரவதை செய்யப்பட்டு பலியாகி இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும் இதுபோன்ற கஸ்டடி மரணங்கள் தொடர்வது கண்டனத்திற்குரியது என கூறியிருக்கும் ஸ்டாலின், செல்வமுருகனை தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.