பொது சுகாதாரத்துறை இயக்குநரின் நடவடிக்கைகள் குறித்து அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

பொது சுகாதாரத்துறை இயக்குநரின் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-10 10:55 GMT
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவர் தினேஷ்குமார் என்பவர்   நீதிமன்ற உத்தரவுப்படி தன்னை  சுகாதார அலுவலராக பணியமர்த்த உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தார்.  இதை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு விசாரணையில் அதிகாரிகள் வெவ்வேறு தகவலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். 

மனுதாரரை நியமிப்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி ,   சுகாதாரத்துறை செயலருக்கு எழுதிய கடிதத்தின் மீது 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், 2 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

பொது சுகாதாரத்துறை இயக்குநரின் நடவடிக்கைகள் தொடர்பாக இணை செயலர் தகுதிக்கு குறையாத ஒரு அதிகாரியை நியமித்து அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும்   தவறு நடந்திருந்தால் அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

தற்போதைய இயக்குநர் செல்வவிநாயகம், முந்தைய இயக்குநர் குழந்தைசாமி ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி அதை உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம்  2 வாரத்தில் செலுத்தவும் உ,த்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்