"கிசான் முறைகேட்டில் இதுவரை 2712 போலி நபர்கள் கண்டறியப் பட்டுள்ளனர்" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல்
கிசான் திட்டத்தில், விவசாயத்துறை இணை இயக்குனருக்கு கொடுக்கப்பட்ட பாஸ்வேர்டை பயன்படுத்தி, முறைகேடு நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேட்டில் இதுவரை 2 ஆயிரத்து 712 போலி நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். இதுவரை 78 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயத்துறை இணை இயக்குனருக்கு கொடுக்கப்பட்ட பாஸ்வேர்டை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டதாக வாலாஜாபத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், ஆட்சியர் பொன்னையா கூறினார்.