நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் - பக்தர்களின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி
ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ராமேஸ்வரம் கோயிலில் கடந்த 12 நாட்களாக சுமார் 2 ஆயிரம் முதல் இரண்டாயிரத்து 500 பேர் வரை சாமி தரிசனம் செய்து சென்ற நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, கோயில் ரதவீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாகராஜா கோயிலில் குவிந்த பக்தர்கள் - ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை - பக்தர்கள் வழிபாடு
ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர். ஆண்டுதோறும் ஆவணி ஞாயிற்றுக் கிழமை அன்று, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நாகர் சிற்பங்களுக்கு உப்பு, மூட்டை, மஞ்சள் தூள், பால் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தர்கள்- இடைவெளியை மறந்து கடற்கரையில் கூடிய மக்கள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கல் கார் மற்றும் பேருந்துகள் மூலம் வேளாங்கண்ணி வந்துள்ளனர். அதோடு, வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளி இன்றியும், முக கவசம் இல்லாமலும் குவிந்து வருகின்றனர். காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.