"ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க வேண்டும்" - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்
மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும் என தமது டுவிட்டர் பக்கத்தில், கமல் வலியுறுத்தியுள்ளார். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை என்றும் நாம் அதை செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.