மனைவி, குழந்தையை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் - சிஆர்பிஎப் அதிகாரி குறித்து பிரதமர் அலுவலகத்தில் மனைவி புகார்
தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் தன் கணவர் வாழ்ந்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஆர்பிஎப் அதிகாரியின் மனைவி பிரதமர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி நாயக்கர் பகுதியை சேர்ந்தவர் நவீனா. இவருக்கு தேனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் கடந்த 2012ல் திருமணம் நடந்தது. சிஆர்பிஎப் அசிஸ்டண்ட் கமான்டன்ட் ஆக பணிபுரிந்து வரும் வெங்கடேசனுக்கு அதே ஊரை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த மனைவி நவீனா, திருமணமான சில மாதங்களிலேயே அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே குழந்தையுடன் வசித்து வரும் நவீனா, தனக்கு உரிய நியாயம் வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் சிஆர்பிஎப் அதிகாரியான வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் அலுவலகத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.