"அரசு மருத்துவர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா வார்டு பணி" -சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
அரசு மருத்துவர்களுக்கு தொடர்ச்சியாக பல மணி நேர கொரோனா வார்டு பணி வழங்குவது கடும் கண்டனத்திற்குறியது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்களுக்கு தொடர்ச்சியாக பல மணி நேர கொரோனா வார்டு பணி வழங்குவது கடும் கண்டனத்திற்குறியது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா நோயாளிகளுக்காக படுக்கைகளை அதிகரித்ததற்கு ஏற்ப மருத்துவர்களையோ செவிலியர்களையோ அரசு அதிகரிக்க வில்லை என்றும் இதனால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் உயிர்காக்கும் மருத்துவர்களின் நலனில் அரசும் சுகாதாரத்துறையும் அக்கரை காட்டவேண்டும் என்றும் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.