கொரோனா சிகிச்சை பணிகளுக்காக கூடுதல் அவசர ஊர்திகள் - சென்னையில் துவக்கி வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 103 கோடியே 50 லட்சம் மதிப்பில் 500 அவசர கால ஊர்திகள் வாங்கப்படுகின்றன.
கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 103 கோடியே 50 லட்சம் மதிப்பில் 500 அவசர கால ஊர்திகள் வாங்கப்படுகின்றன. அதில் முதல் கட்டமாக 118 வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் துவக்கி வைத்தார். 108 சேவை மூலமாக 90 ஆம்புலன்ஸ்கள், நடமாடும் ரத்த வங்கிகள் உள்ளிட்ட 118 வாகனங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை பார்வையிட்ட முதலமைச்சர்
ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி துவக்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதன் பிறகு, அந்த வாகனங்களுக்குள் ஏறிச் சென்று நேரடியாக பார்வையிட்டார். சென்னை தலைமைச் செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ஆம்புலன்ஸ்கள், நடமாடும் ரத்த வங்கிகள் உள்ளிட்ட அவசரகால ஊர்திகளை அவர் ஆய்வு செய்தார்.