கோரிக்கை வலியுறுத்தி நேற்று போராட்டம் - டாஸ்மாக் பணியாளர்கள் 450 பேர் இடமாற்றம்
பணி நிரந்தரம், கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம், கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நடந்த இந்த போராட்டத்தில் 450 பணியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் டாஸ்மாக் பணியாளர்கள் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.