தொழில் நிறுவனங்களுக்கான கொரோனா கால சிறப்பு நிதி - இரண்டாவது இடத்தில் தமிழகம்
கொரோனா கால சிறப்பு நிதியாக, சிறு குறு உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் பெற்று கொடுத்ததில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கொரோனா காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை பொருளாதார ரீதியாக சந்தித்து வருகிறது. இதனை சரி செய்வதற்காக ஆத்ம நீர்பார் பாரத் திட்டத்தின் மூலமாக பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்து வருகிறது.
அதன்படி சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 7 ஆயிரத்து 756 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்திற்கு 7 ஆயிரத்து 740 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 5 ஆயிரத்து 693 கோடி ரூபாயை பல்வேறு நிறுவனங்கள் பெற்றுயுள்ளன. இதன் மூலம் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தொழில் ரீதியான பாதிப்பிலிருந்து மீளும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது,.