காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு - ஊரடங்கு உத்தரவையும் மீறி கூடிய பொதுமக்கள்
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக, ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். புதுமண தம்பதியர் திரண்டு தங்களது கல்யாண மாலையை காவிரியாற்றில் விட்டு புனித நீராடுவர். குற்றாலம், சேலம், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் கொண்டாட்டம் களைகட்டும். காவிரி கரையோர மாவட்டங்களிலும் உற்சாகம் கரைபுரளும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆடி18 கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது. இதனிடையே மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் ஏராளமான பெண்கள் ஆடிப்பெருக்கு வழிபாட்டில் ஈடுபட்டனர்.