இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு விவகாரம் : "மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் முடிவு"

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து, அரசு முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-07-23 09:35 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக பாலிடெக்னிக் , கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வை தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள், அரியர்ஸ் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 
அதேநேரத்தில், அரியர்ஸ் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. தேர்வு விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே, மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்