"சுய விளம்பரத்திற்காக, போராட்டங்களை கை விடுங்கள்" - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து
சுய விளம்பரங்களுக்காக போராட்டங்கள் அறிவிப்பதை விடுத்து மக்களுக்கு பயனுள்ள செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தி.மு.க முன் வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சுய விளம்பரங்களுக்காக போராட்டங்கள் அறிவிப்பதை விடுத்து மக்களுக்கு பயனுள்ள செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தி.மு.க முன் வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சி என்பது, எதிரிக்கட்சி அல்ல என்பதை புரிந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். திமுக, இனியும் திராவிடம் பேசி தமிழர்களை ஏமாற்ற முடியாது என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.