"மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லை" - தமிழக அரசு மீது கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
கொரோனா சூழலால் வருமானம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லாமல், பற்றாக்குறை என அரசு கூறி வருவதாக, திமுக எம்பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா சூழலால் வருமானம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லாமல், பற்றாக்குறை என அரசு கூறி வருவதாக, திமுக எம்பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், தஞ்சை மற்றும் கோவையில் தலா ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இரண்டு டெண்டர்கள் இன்று திறக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பெருந்தொற்று காலத்தில் உட்கட்டமைப்பு, புதிய திட்டங்கள் செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அந்த நிதியை மக்களின் நிவாரணம், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்கு அரசு பயன்படுத்த வேண்டும் என கனிமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.