கொடிவேரி தடுப்பணையை ஆய்வு செய்த அமைச்சர் - சுற்றுலா தலமாக்கும் பணிகள் குறித்து ஆலோசனை
ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்கும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்கும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். பவானிசாகர் அணையில் இருந்து வரும் நீரை தடுத்து செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வான் மன்னன், சுமார் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு உள்ளது. இந்த தடுப்பணையை சுற்றுலா தளமாக்கும் பணியை பார்வையிட்ட அமைச்சர் செங்கோட்டையன், 2 கோடியே 55 லட்சம் ரூபாய் நிதியில் பணிகள் துவங்க உள்ளதாக கூறினார்.