"சென்னையில் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

சென்னையில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-15 16:45 GMT
சென்னையில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நோய் தடுப்பு பணிகளை அமைச்சர் காமராஜ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், 300 வீடுகளுக்கு ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்