குரங்கு வளர்த்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் நடந்த சம்பவம்

கிருஷ்ணகிரி அருகே குரங்கு வளர்த்தவருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Update: 2020-06-14 02:34 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை அடுத்த நேரலகிரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குரங்கு குட்டி ஒன்றை எடுத்து வந்து அதை வளர்த்து வந்துள்ளார். அதனை குளிக்க வைத்தும், போதிய உணவுகள் வழங்கியும் பராமரித்து வந்த அவர், அந்த வீடியோக்களை டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார். இது வனத்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குரங்கை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை வனப்பகுதியில் விட்டாலும் அது மீண்டும் சரவணகுமாரையே தேடி வந்தது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது. 
Tags:    

மேலும் செய்திகள்