சிறையில் வசதி செய்து தர கைதியிடம் பேரம் : காவலர் பணியிடை நீக்கம் - நெல்லை சிறைத்துறை

சிறையில் வசதி செய்து தர கைதியிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் சங்கரன்கோவில் கிளைச்சிறை தலைமை கண்காணிப்பு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-06-13 08:34 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கிளை சிறையின் தலைமை கண்காணிப்பு காவலராக பணிபுரிபவர் வைரமணி. இவர் சிறையில் இருக்கும் பட்டாசு ஆலை மேலாளருக்கு வசதிகள் செய்து தர பேரம் பேசிய ஆடியோ வெளியானது. சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய இந்த ஆடியோ குறித்து நெல்லை சிறைத்துறை விசாரணை மேற்கொண்டது. அதில் ஆடியோ உண்மை என கண்டறியப்பட்டதை தொடர்ந்து, தலைமை கண்காணிப்பு காவலர் வைரமணியை பணிஇடைநீக்கம் செய்து நெல்லை சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்